மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு எதிராக சிவசேனா ஆர்ப்பாட்டத்தில் வன்முறை; 3 பேர் கைது


மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு எதிராக சிவசேனா ஆர்ப்பாட்டத்தில் வன்முறை; 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2019 11:11 PM GMT (Updated: 18 Nov 2019 11:11 PM GMT)

தென்மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு எதிராக சிவசேனாவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒப்பந்ததாரர் லாரியை அடித்துநொறுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மெட்ரொ ரெயில் 3 திட்டப்பணிகள் கொலபா - சீப்ஸ் இடையே நடந்து வருகிறது. இந்தநிலையில் தென்மும்பை, தாக்குர்டுவர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணி களால் அப்பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப் படுவதாக சிவசேனா குற்றம் சாட்டியது.

அவர்கள் மெட்ரோ திட்டப்பணிகளால் ஏற்படும் இறைச்சல் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும் மெட்ரோ பணிகளால் அங்குள்ள வீட்டு சுவர்களில் விரிசல்கள் விழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதை கண்டிக்கும் வகையில் 200-க்கும்அதிகமான சிவசேனா கட்சியினர் நேற்று தென்மும்பை, தாக்குர்டுவர் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் போராட்டத்தின்போது ஆத்திர மடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வன்முறையில் குதித்தனர். அவர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த மெட்ரோ திட்டப்பணி ஒப்பந்ததாரரின் லாரியை அடித்து நொறுக்கினர். நிலைமை எல்லை மீறி செல்வதை கண்டுஅதிர்ச்சி அடைந்த போலீசார் போராட்டக்காரர்களை விளக்கிவிட்டதுடன், லாரியை அடித்து நொறுக்கி 3 பேரை கைது செய்தனர். மேலும் வன்முறையையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் பிரனாய் அசோக் கூறுகையில், ‘‘வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவசேனா கட்சியை சேர்ந்த 3 பேரை கைது செய்து உள்ளோம்’’ என்றார்.

Next Story