தஞ்சாவூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வெட்டுவாக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்.மதியழகன் நியமனம்


தஞ்சாவூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வெட்டுவாக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்.மதியழகன் நியமனம்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:00 AM IST (Updated: 22 Nov 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக வெட்டுவாக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரத்தநாடு,

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ராமச்சந்திரன், துரைக்கண்ணு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக வெட்டுவாக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.மதியழகன் தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.மதியழகன் கடந்த 1972-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 47 ஆண்டுகளாக அ.தி.மு.க. வில் பணியாற்றி வருகிறார். இவர் அக்கட்சியில் மாவட்ட இணைச்செயலாளர், மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார் என்பதும், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.மதியழகனுக்கு திருவோணம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story