வேப்பூர் அருகே, கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
வேப்பூர் அருகே அருகே தாத்தா பாட்டியுன் வசித்து வந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள ஏ.சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சுப்ரமணியன் (வயது, 39), இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார்.
இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக சுப்ரமணியன் ஊட்டிக்கு சென்றுவிட்டார். பெரிய மகள் நர்சிங் முடித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இளைய மகளான தனலட்சுமி (வயது 19) வேப்பூர் அருகிலுள்ள கண்டபங்குறிச்சி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்தவர் நேற்று காலை தாத்தா பாட்டி வயல் பகுதிக்கு சென்றபோது தனிமையில் இருந்தவர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் இது குறித்து தனலட்சுமி தந்தை சுப்ரமணியன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story