அயோத்தியாப்பட்டணத்தில் 1,128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ராமன் வழங்கினார்
அயோத்தியாப்பட்டணத்தில் நடந்த விழாவில் 1,128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
அயோத்தியாப்பட்டணம்,
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 19.08.2019 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொங்கணாபுரத்தில் கடந்த 09.11.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் குறித்து சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை பெற குறைந்தபட்ச சொத்து மதிப்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் ஆய்விற்கு எடுத்துகொள்ளப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூரிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரப்ப முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 166 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 40 பேருக்கு விதவை உதவித்தொகையும், 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், 1 பயனாளிக்கு முதிர்கன்னி உதவித்தொகையும், 224 ேபருக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையும், 37 பேருக்கு இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும், 61 பேருக்கு இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகையும், 13 பேருக்்கு கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 141 பேருக்கு விவசாய கூலி உதவித்தொகையும், 46 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களும் உள்பட மொத்தம் 1,128 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், ஆர்.டி.ஓ. மாறன், தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சுகந்தி பரிமளம், வாழப்பாடி தாசில்தார் .ஜாகீர் உசேன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் முத்துசாமி, அருண்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story