தமிழ் தெரியாத நீதிபதிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு: தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்


தமிழ் தெரியாத நீதிபதிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு: தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Nov 2019 4:00 AM IST (Updated: 22 Nov 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத நீதிபதிகளை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தேனி, 

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத வக்கீல்களை நீதிபதிகளாக நியமிப்பதை எதிர்த்தும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சமரச தீர்வு மையத்தில் தீர்வு காண்பதை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரத போராட்டத்தின் போது, தமிழ் தெரியாத வக்கீல்களை தமிழ்நாட்டில் நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சமரச தீர்வு மையத்தில் தீர்வு காண்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில், தேனி வக்கீல் சங்க செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் செல்வக்குமார் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பெரியகுளம் கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.
1 More update

Next Story