உப்புக்கோட்டை பகுதியில், சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு


உப்புக்கோட்டை பகுதியில், சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 24 Nov 2019 9:21 PM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்தது.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதிகளான குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை, டொம்புச்ேசரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சின்ன வெங்காயம், கத்தரிக்காய், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது உப்புக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. அவை அந்த பகுதியில் உலர வைத்து, தரம் பிரிக்கப்பட்டு தேனி மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உப்புக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.

இந்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அதனால் கடந்த வாரம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. தற்போது வரத்து குறைந்ததால், சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது என்றனர்.

Next Story