ராமேசுவரத்தில் பலத்த மழை: கோவிலை சூழ்ந்த மழைநீர்


ராமேசுவரத்தில் பலத்த மழை: கோவிலை சூழ்ந்த மழைநீர்
x
தினத்தந்தி 25 Nov 2019 3:15 AM IST (Updated: 25 Nov 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் லெட்சுமண ஈசுவரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது.

ராமேசுவரம், 

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் 2-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது.

காலை 9.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே பலத்த மழை பெய்தது. மழையால் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த உபகோவிலான லெட்சுமண தீர்த்தம் அமைந்துள்ள லெட்சுமண ஈசுவரர் கோவில் மற்றும் நாகநாதர் கோவிலையும் மழைநீர் சூழ்ந்து நின்றது.

இதேபோல் கோவிலின் கிழக்கு ரதவீதி சாலை, தனுஷ்கோடி செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் மழை நீரானது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பாம்பனில் பெய்த பலத்த மழையால் ரோடு பாலத்தின் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது. வாகனங்கள் ஒவ்வொன்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி வேகமாக சென்றன. தங்கச்சிமடத்திலும் பலத்த மழை பெய்தது. ேமலும் பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது.

Next Story