சேலத்தில் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு 379 பேர் எழுதினர்


சேலத்தில் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு 379 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடைபெற்ற நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வை 379 பேர் எழுதினர்.

சேலம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு சேலம் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலா‌‌ஷ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தேர்வு மையத்தில் 412 தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 379 பேர் தேர்வு எழுதினர்.

இந்த போட்டித்தேர்வு மையத்தை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஸ்குமார், இளந்திரையன், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு

தேர்வினை முழுமையாக கண்காணித்து பதிவு செய்திட ஒரு அறைக்கு 2 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 2 அறைகளுக்கும் 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதை முழுமையாக பதிவு செய்யப்பட்டது. சேலம் உதவி கலெக்டர் மாறன் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முனுசாமி, முதன்மை துணை நீதிபதி ஸ்ரீராமஜெயம், சிறப்பு நீதிபதி சுகந்தி, இரண்டாவது மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி சையது சுலைமான் உசேன், தாசில்தார் மாதேஸ்வரன் உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story