உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஞ்சய் தத் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.
திருப்பூர்,
பா.ஜனதா அரசின் 66 மாத ஆட்சியில் இதுவரை நாடு வேலையில்லா திண்டாட்டம் 8.1 சதவீகிதம் என்ற அளவிற்கு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் முன்பு இல்லாத வகையில் மிகவும் மந்தநிலை அடைந்துள்ளது. அத்தியாவசியப்பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளதாகக்கூறியும், இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (திருப்பூர் வடக்கு, மாநகரம், திருப்பூர் தெற்கு) சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாவட்ட தலைவர் கோபி, தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சி நிர்வாகி காளிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சட்டவிரோதமாக பதவி ஏற்பு
இதன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல், கட்டாயமாக கூட்டவேண்டிய மந்திரிசபையை கூட கூட்டாமல், ஜனாதிபதி ஆட்சி நள்ளிரவு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை குறைந்தபட்சம் எழுத்துப்பூர்வமாக இருப்பதை உறுதி செய்து, கவர்னர் தன்னிறைவு பெற்ற பின்னர் தான் பதவியேற்பு நடைபெறுவது வழக்கம்.
அதற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக மராட்டியத்தில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க ஒரு நாள் அவகாசம் கூடுதலாக கேட்டனர். ஆனால் அதற்கு கவர்னர் மறுத்துவிட்டார். காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் சட்டவிரோதமாக பதவி ஏற்றதும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் டுவிட்டரில் உடனடியாக வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
மக்கள் பாதிப்பு
இது துப்பாக்கி முனையில் தப்புவது போன்றது. ஏனென்றால் அவர்களிடம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை. இது பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோர் ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரை நிர்பந்தித்து, அழுத்தத்தினால் எடுக்க வைத்த முடிவு என்பதையே காட்டுகிறது. ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதியை நிலைநாட்டும் அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க. அழித்துவிட்டது. ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கிறது பா.ஜனதா அரசு. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பா.ஜ.க.வின் நட்பு அமைப்புகளை போன்று தவறாக பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து நிலைமைகளையும் பார்க்கும்போது மோடி தலைமையிலான அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுவதையே காட்டுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும், பா.ஜ.க.வினை பின்பற்றியே செயல்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, தவறுதலாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகிய மோசமான மத்திய அரசின் கொள்கைகளால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
அ.தி.மு.க. அரசும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து, அவர்களைபோன்றே செயல்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்தார்கள். அதேபோன்று வர உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவு தருவார்கள். அதிக இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் பண பலம், அதிகார பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மறைமுகமாக அதிகாரத்தை பிடிப்பதற்கு ஆளுங்கட்சி செய்யும் முறைகேடுகளை கடந்து, மக்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறேன். வருங்கால தலைமுறையை காப்பாற்றுவதற்காக மக்கள் இந்த முடிவினை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story