திருக்கனூர் அருகே பரபரப்பு ரவுடி கும்பலின் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை
திருக்கனூர் அருகே ரவுடி கும்பலின்2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்று பாலத்தின் அடியில் நேற்று இரவு 7 மணியளவில் 5 பேர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அவர்கள் தங்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ரவுடி உள்பட 15 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்தது. இதனை பார்த்த உடன் அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்கள் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர்கள், அங்கு நின்ற மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அவற்றை தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனை பார்த்த செல்லிப்பட்டு கிராம மக்கள் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல தாதாவின் ஆதரவாளராக உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ஒரு ரவுடிக்கும், திருக்கனூர் கொடாத்தூர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக் கடையில் ஏற்பட்ட மோதலால் முன்விரோதம் இருந்து வந்தது. எனவே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அந்த ரவுடியை கொலை செய்யும் நோக்கில் சிலர் வந்திருக்கலாம்.
இது பற்றி தகவல் அறிந்த உடன் அந்த ரவுடி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றுள்ளார். இதனை பார்த்த உடன் அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த ரவுடி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து கொளுத்தியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ரவுடிக்கும், மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ஒருவருக்கும் முன்விரோதம் உள்ளது. அதனால் இந்த மோதல் ஏற்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிள்ளையார்குப்பம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வாதானூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story