கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஊராட்சி நிர்வாகத்தின் வரவு, செலவு மற்றும் ஊராட்சி செயலாளர் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். 40 நாட்கள் கடந்தும் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கொடு..! என்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதாகையுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார். தகவல் அறிந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தனலெட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து தகவல்கள் கொடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு திருவரங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குறிப்பிட்ட தகவல்கள் 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
மேலும் கொத்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் கூறுகையில், ஆம் ஊராட்சி செயலாளர் மகேஷ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கூடுதல் பொறுப்பாக குளமங்கலம் தெற்கு ஊராட்சி செயலாளர் மயில்வாகணன் பார்த்து வருகிறார் என்றார். ஆனால் மனைவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இடத்தில் கணவர் பொறுப்பு பார்ப்பது சரியாக இருக்காது. இதனால் மயில்வாகணனை மாற்றிவிட்டு வேறு ஊராட்சி செயலாளரை தற்காலிக பணிக்கு நியமிக்க வேண்டும் என்று கூறியதுடன், பொதுமக்கள் கையெழுத்திட்டு மனுவும் கொடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. 2 நாட்களில் தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், ஊராட்சி செயலாளர் பொறுப்பு மாற்றப்படவில்லை என்றாலும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறி களைந்து சென்றனர்.

Related Tags :
Next Story