7-வது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


7-வது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 25 Nov 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

7-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்கக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின்படி ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு ஊராட்சிகள் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ரூ.50 ஆயிரம், ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌‌ஷங்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் முனியாண்டி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணை தலைவர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story