விலையில்லா ஆடுகள் வழங்குவதில் குளறுபடி: ஆதார் அட்டைகளுடன் வந்து கோ‌‌ஷமிட்ட பெண்கள்


விலையில்லா ஆடுகள் வழங்குவதில் குளறுபடி: ஆதார் அட்டைகளுடன் வந்து கோ‌‌ஷமிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 26 Nov 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

விலையில்லா ஆடுகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆதார் அட்டைகளுடன் வந்து பெண்கள் கோ‌‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமருகல் அருகே கட்டுமாவடி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் ஆதார் அட்டைகளுடன் கலந்து கொள்ள வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டு கட்டுமாவடி பகுதியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் பெறும் பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடியான பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் எங்களது ஆதார் அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோ‌‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.

பேச்சுவார்த்தை

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன், அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்கு 180 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் பெறும் பயனாளிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சொந்த நிலம் உள்ளவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விலையில்லா ஆடுகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியை சரி செய்து, தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும் விலையில்லா ஆடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story