சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்


சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 26 Nov 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் இருந்து தலைஞாயிறு வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடைத்தெரு அருகே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கீழையூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரிமள செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், மாநில விவசாய அணி செயலாளர் தமிழ் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பு‌‌ஷ்பராஜ், ஒன்றிய பொறுப்பாளர் சந்திரமோகன் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்காலிகமாக சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story