மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில்: வணிகர் சங்க துணைத்தலைவர் சாவு


மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில்: வணிகர் சங்க துணைத்தலைவர் சாவு
x
தினத்தந்தி 27 Nov 2019 4:15 AM IST (Updated: 26 Nov 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வணிகர் சங்க துணைத்தலைவர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் டி.கே.எம். சாலையில் வசித்து வந்தவர் சந்திரன் (வயது 60), இவர் தென்சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க துணைத்தலைவராகவும், மாமல்லபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவராகவும், கருக்காத்தம்மன் கோவில் தர்மகர்த்தாவாகவும் பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக பெட்ரோல் நிலையத்திற்கு சென்றார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் பொட்ரோல் நிரப்பி கொண்டு வீடு திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் பல்லவன் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த சந்திரன் சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Next Story