இடைத்தேர்தல் பணியில் அலட்சியம்: தேர்தல் அதிகாரிகள் 6 பேர் பணி இடைநீக்கம்


இடைத்தேர்தல் பணியில் அலட்சியம்: தேர்தல் அதிகாரிகள் 6 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:00 PM GMT (Updated: 26 Nov 2019 8:42 PM GMT)

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பெங்களூருவில் கே.ஆர்.புரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.

பெங்களூரு, 

சோதனை சாவடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் படைகளில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சிலர் அலட்சியமாகவும், லஞ்சம் வாங்கி கொண்டு விதிகளை மீறுபவர்களை விட்டுவிடுவதாகவும் மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 

இதையடுத்து பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் அனில்குமார், தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட சந்திரப்பா, தர்ஷன், சீனிவாசமூர்த்தி, தினேஷ் உள்பட 6 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story