கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சின்னசாமி, செல்லவேல், இந்திராணி, மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மச்சேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகை சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், வட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் குழந்தைவேலு, கருணாகரன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story