கண்ணமங்கலம் அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


கண்ணமங்கலம் அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2019 3:45 AM IST (Updated: 27 Nov 2019 6:49 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி, 

கண்ணமங்கலத்தை அடுத்த குப்பம் ஊராட்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாராம். விவசாயி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 20), தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சைக்கு சென்று வந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விநாயகமுர்த்தி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story