அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 1,135 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 1,135 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Nov 2019 3:45 AM IST (Updated: 28 Nov 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 549 பெண்கள் உள்பட 1,135 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவாரூர்,

அரசு புறம்போக்கு, கோவில் மனை, வக்போர்டு ஆகிய இடங்களில் வசித்து வரும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க கோரியும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டி தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன் மற்றும் 549 பெண்கள் உள்பட 1,135 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story