மாவட்ட செய்திகள்

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் + "||" + Singaberumal temple in Kozhikode: The holy water from the Kolli river

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் எனப்படும் லட்சுமிநரசிம்மர்கோவில் உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டதால் காட்டழகியசிங்கப்பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


இக்கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து வருகிற 1-ந்் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வெளிப்பிரகார விரிவாக்கம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடந்த 18-ந்தேதி கருவறை பாலாலயம் செய்யப்பட்டு, அங்கு திருப்பணிகள் நடந்தன.

வெள்ளிக்குடத்தில் புனிதநீர்

நேற்று முன்தினம் மாலை பாஞ்சராத்தர ஆகம முறைப்படி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

கும்பாபிஷேகம்

வருகிற 1-ந்தேதி அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 8 மணியளவில் மகாபூர்ணாஹுதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8.45 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கருவறை விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்துகின்றனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, சுதர்சன ரங்காச்சாரி ஆகியோர் தலைமையில் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரம்
வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2. திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் கறி விருந்து படையல் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
திருமங்கலம் அருகே நடந்த ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழாவில் கறி விருந்து படையல் நடந்தது.
3. திசையன்விளையில் துணிகரம்: கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திசையன்விளையில் கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. குளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
குளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
5. தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத தெப்பத்திருவிழா
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ள தெப்பத்திருவிழாவை மீண்டும் நடந்தவேணடும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.