மாவட்ட செய்திகள்

வெள்ளகோவில் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் + "||" + At the checkpoint at Wellago Purchased money from the driver Dismissal of police workplace

வெள்ளகோவில் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

வெள்ளகோவில் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
வெள்ளகோவில் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் இருளாண்டி. இவர் அப்பகுதியில் உள்ள கரூர் மாவட்ட எல்லையான குருகத்தியில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியை தடுத்து நிறுத்தி பணம் வாங்குவது போல ஒரு வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி பணம் வசூல் செய்வது போல காட்சி உள்ளது. மேலும் அந்த நபரிடம் கூடுதல் பணம் கேட்பது போலவும், சப்-இன்ஸ்பெக்டர் இருந்திருந்தால் கணக்கு வேறு மாதிரி செய்து இருப்பார் என்றும் இருளாண்டி கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த தகவல் காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இருளாண்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர் இது தொடர்பாக போலீஸ்காரர் இருளாண்டியை பணியிடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆம்புலன்ஸ் மீது கல்வீச்சு-போலீஸ் தடியடி
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தேர்தல் அலுவலர் மயக்கம் அடைந்ததால் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் மீது கல்வீசினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
2. ஊரக உள்ளாட்சி தேர்தல்: கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்யும் பொருட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கரூர் மாவட்டத்தில் கரூர் உள்பட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக் கை நடந்தது.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 20 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி 20 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. புத்தாண்டு பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
நாகை மாவட்டத்தில், புத்தாண்டு பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.