வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் விடிய விடிய தர்ணா போராட்டம்
தேவூர் அருகே வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவூர்,
தேவூர் அருகே கத்ேதரி ஊராட்சி பகுதியில் உப்பு பள்ளம் என்ற இடத்தில் அரசு புறம்போக்கு நிலம் 9 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டு மனைகளாக பிரித்து தர வலியுறுத்தி, அங்கு குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த அப்போதைய தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆய்வு செய்து 6 மாதங்களில் நிலத்தை பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என தெரிகிறது.
தர்ணா போராட்டம்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி சம்பந்தப்பட்ட இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சங்ககிரி ஆர்.டி.ஓ. அமிர்தலிங்கம், தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று காலை அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று மதியம் அனைவரும் கலைந்து சென்றனர். கிராம மக்கள் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story