மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 7 பெண்கள் உள்பட 19 பேர் காயம்


மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 7 பெண்கள் உள்பட 19 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 6:50 PM GMT)

மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.

மோகனூர்,

கரூர் மாவட்டம் கிரு‌‌ஷ்ணராயபுரம் அருகே உள்ள கீழசெந்தில் பாவடையை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 35). டிரைவர். இவர் லாலாபேட்டையில் இருந்து நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே உள்ள திப்ரமாகதேவியில் நடைபெறும் காதுகுத்து விழாவிற்கு செல்வதற்காக வேனில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது மோகனூர் அருகே காட்டுப்புத்தூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் ஆலம்பட்டி அருகே வேன் வந்தபோது அந்த வழியாக சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க டிரைவர் ராஜசேகரன் வேனை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ரஞ்சிதா (23), எஸ்.பாலப்பட்டியை சேர்ந்த கிரு‌‌ஷ்ணவேனி (25), லட்சுமி (28), தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த லோகேஸ்வரி (17), முனீஸ்வரி (26), நெல்லையை சேர்ந்த காளீஸ்வரி (22), திண்டுக்கல்லை சேர்ந்த சாந்தாமணி (26) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story