மாவட்ட செய்திகள்

மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு + "||" + Deputy Regional Growth Officer in the case of deer hunting is the Collector's order

மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு

மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு
மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (வயது 46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய காரில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


அப்போது ராபின்சன் வந்த காரில் ரத்த கறைகள் இருப்பதை கண்ட போலீசார், ரத்த கறைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் ரத்த கறையுடன் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

பணியிடை நீக்கம்

மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியை சேர்ந்த ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், திருவப்பூரை சேர்ந்த ராஜே‌‌ஷ், சுரே‌‌ஷ், பாசிப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரை சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூறி, திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராமன், ராஜே‌‌ஷ், வெங்கடாஜலபதி, சாமுவேல் பிரின்ஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், சுரே‌‌ஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில் போலீஸ்காரர் ராமச்சந்திரனை ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை கலெக்டர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.
2. கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
3. கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதியவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மாவட்டத்தில் பரவலாக மழை: சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு வலசக்கல்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வீரகனூர் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வலசக்கல்பட்டி ஏரியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.