கோவையில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து
கோவையில் வணிக வளாக கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பைகள் எரிந்து நாசம் அடைந்தது.
கோவை,
கோவைவெறைட்டிஹால்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). இவர்டவுன்ஹால்ஐந்துமுக்கு சந்திப்பு பகுதியில்உள்ள வணிக வளாகத்தில் 3-வது மாடியில் கைப்பை மற்றும் டிராவல்ஸ்பைகளை விற்பனை செய்யும் கடை மற்றும் குடோன்வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடை மற்றும் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை இவரது குடோனில் உள்ள 3-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெறைட்டிஹால்ரோடு போலீசாருக்குதகவல் தெரிவித்தனர்.
கோவை தெற்குமற்றும் வடக்கு தீயணைப்பு நிலையஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்துஏற்பட்டதாக தெரிகிறது.தீவிபத்தில்லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பைகள் எரிந்து நாசம் அடைந்தது. இதுகுறித்து வெறைட்டி ஹால் ரோடுபோலீசார்விசாரணை நடத்திவருகிறார்கள்.
குடோன்அருகில் ஏராளமான கடைகள் உள்ளன. தீ உடனடியாகஅணைக்கப்பட்டதால்பெரும் சேதம்தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story