படப்பை அருகே அம்மா பூங்காவில் முளைத்திருக்கும் செடி, கொடி, புற்களை அகற்ற வேண்டும்


படப்பை அருகே அம்மா பூங்காவில் முளைத்திருக்கும் செடி, கொடி, புற்களை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 5 Dec 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

படப்பையை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நலன் கருதி அந்த பகுதியில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நலன் கருதி அந்த பகுதியில் தாய் திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், விளையாடி வருகின்றார். இதேபோல் உடற்பயிற்சி கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்லும் வழியில் காடுபோல் செடி, கொடிகள் முளைத்து உள்ளது. பூங்காவின் வெளிப்பகுதியில் அதிக அளவில் செடி, கொடி, புற்கள் முளைத்து காணப்படுகிறது. கொசுக்கள், பூச்சிகள், வண்டுகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் உட்புறம் வெளிப்புறம் உள்ள புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story