இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்


இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 6 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம், 

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதியையொட்டி(இன்று) நாடு முழுவதும் முக்கிய கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், ரெயில்நிலையம், தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்துக்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக சென்ற ரெயில்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. வெளியூர் செல்லும் பார்சல்கள் மற்றும் வந்து இறங்கும் பார்சல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதேபோல், சேலம் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மோப்ப நாய்கள் மூலம் போலீசார் சோதனை நடத்தினர். கோவில்கள், மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என போலீசார் சோதனை நடத்தினர். இதுதவிர இரவு முழுவதும் வாகன தணிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். சேலம் சரகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story