அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 6 Dec 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முசிறி,

முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முசிறி அருகே உள்ள பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு சாலை மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ராக்கம்பட்டியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story