நெமிலி அருகே, மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி


நெமிலி அருகே, மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 4:15 AM IST (Updated: 6 Dec 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பனப்பாக்கம், 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நாகவேடு காலனியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 36), விஸ்வநாதன் (32). இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் நெமிலியில் இருந்து நாகவேடு கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

சம்பத்ராயன்பேட்டை கூட்ரோடு அருகே வந்தபோது, அரக்கோணத்தில் இருந்து நெமிலிக்கு வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் - மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசனும், விஸ்வநாதனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான விஸ்வநாதனுக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே காலனியை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story