வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கலுக்கு புதிய படிவம்
வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கலுக்கு புதிய படிவத்திற்கு கருத்து கேட்பு கூட்டத்தில் வரி செலுத்துவோர் வரவேற்றனர்.
திருச்சி,
ஜி.எஸ்.டி. செலுத்துவோர் தங்களது ரிட்டன் கணக்கை தாக்கல் செய்வதற்காக புதிய படிவம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய படிவம் தற்போது சோதனை அடிப்படையில் உள்ளது. இந்த படிவத்தில் உள்ள நிறைகள், குறைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் திருச்சி ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் ஆணையம் சார்பில் ஜங்ஷன் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி கமிஷனர் கென்னடி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கலுக்கு இந்த படிவம் எளிமையாக இருக்கும். தற்போது 2 முறை ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டிய முறை உள்ளது. புதிய படிவத்தில் ஒரே ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதும். ஆன்-லைனில் பதிவேற்றிய பின் திருத்தங்கள் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விலைப்பட்டியலை தினமும் பதிவேற்றலாம்.
புதிய படிவத்திற்கு வரி செலுத்துவோர் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனை மேலும் எளிமையாக்குவதற்கும், குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வழிமுறைகளையும் தெரிவிக்கலாம். இந்த புதிய படிவத்தை தற்போது சோதனை அடிப்படையில் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் ஏற்படும் சந்தேகங் களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல்விளக்கம்
கூட்டத்தில் நிலுவையில் உள்ள மத்திய கலால் மற்றும் சேவை வரியை செலுத்துவதற்கான ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன. கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் ஆரோக்கியராஜ், சூப்பிரண்டு விஸ்வநாதன், வக்கீல் ஆரோக்கியராஜ், ஆடிட்டர் ராம்குமார் மற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து ஜி.எஸ்.டி. ெசலுத்துவோர், தொழில்அதிபர்கள், ஆடிட்டர்கள், ஜி.எஸ்.டி. ஆலோசகர்கள், வல்லுனர்கள், வணிகப்பிரிவு மற்றும் எம்.பி.ஏ. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆன்-லைனில் ஜி.எஸ்.டி. புதிய படிவத்தை தாக்கல் செய்வது தொடர்பாக கணினியில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பலர் இந்த புதிய படிவத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தனர். தங்களது கருத்துகளை ஒரு படிவத்தில் எழுதி கொடுத்தனர்.

Related Tags :
Next Story