நெல்லையில் படைவீரர் கொடி நாள் வசூல் கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்


நெல்லையில் படைவீரர் கொடி நாள் வசூல் கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:30 PM GMT (Updated: 7 Dec 2019 7:48 PM GMT)

நெல்லையில் படைவீரர் கொடி நாள் வசூலை கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நெல்லையில் படைவீரர் கொடி நாள் வசூலை கலெக்டர் ‌ஷில்பா தொடங்கி வைத்தார்.

கொடி நாள் வசூல்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாள் வசூல் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, கொடி நாள் வசூலை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முப்படையையும் சார்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் இன்னல்களில் இருந்து மக்களை காப்பதிலும், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பதிலும், அவர்கள் தாய் நாட்டுக்கு ஆற்றி வரும் மகத்தான சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர்களின் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 10 லட்சம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு படைவீரர் நிதி வசூல் அரசு இலக்கு ரூ.80 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதையும் மிஞ்சி ரூ.1 கோடியே 10 லட்சம் வசூலிக்கப்பட்டது. குறியீடு இலக்கை கடந்து 177 சதவீதம் எய்திடப்பட்டது. மேலும் நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. 100 சதவீதம் இலக்கை எட்டியது. 995 முன்னாள் படை வீரர் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கு கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 15 லட்சம் நிதி உதவிகள் முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டது.

அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அதிக கொடி வசூல் செய்து முன்னாள் படை வீரர் குடும்பங்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் ‌ஷில்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நல வாரிய தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story