கல்வராயன்மலையில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
கல்வராயன்மலையில் வாலிபர் கொலை வழக்கில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் பழனி மகன் மதியழகன்(வயது26). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த விவசாயி மாணிக்கம்(55) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மலையரசன்பட்டில் உள்ள சித்தனாகாட்டு கொட்டாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மதியழகனை சிலர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்து அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கொலை செய்தது தொடர்பாக மாணிக்கத்தை கைது செய்தனர். மேலும் பழனியம்மாள், ராமேஷ்வரன், காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழனியம்மாள் உள்பட சிலர் வெளியூர் தப்பிச்செல்வதற்காக சங்காரபுரம் பஸ் நிலையத்தில் நி்ற்பதாக வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பழனியம்மாள், ராமேஷ்வரன், சகாதேவன், தீர்த்தன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் காட்டுராஜா, ரஞ்சிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story