கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-08T23:18:22+05:30)

கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொறத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 45). இவர் கடந்த நவம்பர் மாதம் முத்தையன் கோவில் கட்டும் பிரச்சினை காரணமாக ஆங்கியனூர் கிராமத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையின் இடையே காட்டுப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(60), கொறத்தக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(35), வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ்(60), கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அருண்ராஜ்(28), ராஜப்பா மகன் அய்யப்பன்(28), பஞ்சநாதன் மகன் விக்னே‌‌ஷ்(21), செல்வராஜ் மகன் சந்திரசேகர்(28) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் மனைவி ர‌‌ஷ்யாதேவி(28), அவரது கள்ளகாதலனால் அடித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த மருதை மகன் கார்த்திக்(33) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த இரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மொத்தம் 8 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் கீழப்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி ஆகியோர் பரிந்துரையின் பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிரு‌‌ஷ்ணன் நேற்று அவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story