கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள்: வாரிய பதிவெண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை வரை கெடு


கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள்: வாரிய பதிவெண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை வரை கெடு
x
தினத்தந்தி 8 Dec 2019 10:15 PM GMT (Updated: 2019-12-09T00:08:17+05:30)

கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் வாரிய பதிவெண்ணுடன் ஆதாரை இணைக்க, நாளை வரை இறுதி கெடு என்று தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களின் வாரிய பதிவு எண்ணுடன் ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கெடு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத தொழிலாளர்கள் தங்களது வாரிய அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெரு, ரங்கசாமிகுளம் அருகில் உள்ள காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நாளை நேரில் செலுத்தலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாக இணைக்கலாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story