மாவட்ட செய்திகள்

சின்னமனூர் அருகே, குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை + "||" + Near Chinnamanur, Couple suicide on family issue

சின்னமனூர் அருகே, குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை

சின்னமனூர் அருகே, குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை
சின்னமனூர் அருகே குடும்ப பிரச்சினையில் அரளி விதையை அரைத்து குடித்து தம்பதி தற்கொலை செய்தனர்.
சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 60). அவருடைய மனைவி தனலட்சுமி (57). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி சின்னமனூரில் வசித்து வருகின்றனர்.

இதனால் பாண்டியனும், தனலட்சுமியும் குச்சனூர் துரைச்சாமிபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். பாண்டியன் அப்பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். அந்த தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி அரளி விதையை அரைத்து சாப்பிட்டார். இதனை கண்ட பாண்டியனும், அரளி விதையை அரைத்து குடித்தார்.

பின்னர் அவர்கள் 2 பேரும், தங்களது 2-வது மகளின் வீட்டிற்கு சென்று, அரளி விதையை அரைத்து குடித்ததாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது பெற்றோரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி இறந்துபோனார்.

இதற்கிடையே பாண்டியன் மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மாமியாருடன் தகராறு: 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே மாமியாருடன் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2. தானேயில் மகளை கொன்று தம்பதி தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்
தானேயில் குடும்ப தகராறில் மகளை கொலை செய்து தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
3. குடும்ப பிரச்சினையில், 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சி
விழுப்புரம் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து மெக்கானிக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. 3 பெண் குழந்தைகளை கொன்று, தம்பதி தற்கொலை, லாட்டரி மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த சோகம்
லாட்டரியில் பெருமளவில் பணத்தை இழந்ததால் சயனைடு கொடுத்து 3 பெண் குழந்தைகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
5. கொடைக்கானல் அருகே, குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த தம்பதி - மனைவி சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை
கொடைக்கானல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி இறந்தநிலையில் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.