சிவகாசி அருகே, கல்லூரி மாணவி தற்கொலை
சிவகாசி அருகே கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சிவகாசி ரெங்கபாளையத்தை சேர்ந்த அன்னலட்சுமி (வயது 19) என்ற மாணவி படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த அன்னலட்சுமி உற்சாகமின்றி மனம் உடைந்து காணப்பட்டாராம்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அன்னலெட்சுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பேராசிரியர் ஒருவர் தன்னை திட்டியதாக மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story