ஏரி, குளங்களில் சிறுவர்கள் சிக்குவதை தடுக்க விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகை
ஏரி, குளங்களில் சிறுவர்கள் சிக்குவதை தடுக்க விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஓரளவு மழை பெய்து பல வருடங்களாக தண்ணீர் இன்றி கிடந்த ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் பல இடங்களிலும் குடிமராமத்து, கிராமத்தினரின் முயற்சியாலும் குளங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆழமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குள் அன்னவாசல், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பல சிறுவர்களும், மாவட்டம் முழுவதும் பல பெரியவர்களும் ஆழம் தெரியாமல் குளங்களில் இறங்கி மீள முடியாமல் உயிர்பலியாகி உள்ளனர். கடந்த மாதம் கந்தர்வகோட்டை பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
எச்சரிக்கை பதாகை
இந்த நிலையில் தான் கந்தர்வகோட்டை போலீசார் ஆழமான குளத்தின் அருகில் எச்சரிக்கை பதாகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ேமலும்மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆழமான குளம், பாறை உடைக்கப்பட்ட மலை குழிகள் போன்றவற்றின் அருகில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின்படி, மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனரின் ஆலோசனைப்படி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குளங்களின் கரைகளிலும் எச்சரிக்கை பதாகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். நகரம் ஊராட்சியில் உள்ள பல குளங்களின் கரைகளில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் ஆழமான குளங்களின் கரைகளில் எச்சரிக்கை பதாகை வைத்தால் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர்.

Related Tags :
Next Story