கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஆர்ப்பாட்டம் தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஆர்ப்பாட்டம் தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:30 AM IST (Updated: 11 Dec 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறையில் அரசுக்கு சொந்தமான ரப்பர் கழகம் உள்ளது. இந்த ரப்பர் கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கும், ரப்பர் கழக நிரந்தர தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அன்னை சோனியா ராகுல் காந்தி பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணிநிரந்தரம்...

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் தொழில் சங்க தலைவர் அனந்த கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கீரிப்பாறை ரப்பர் கழக கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான தற்காலிக தொழிலாளர்கள் கலந்து கொண்டு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story