மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தொழிலாளி பலி + "||" + Panruti, Bus collision on motorcycle; Worker kills

பண்ருட்டியில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தொழிலாளி பலி

பண்ருட்டியில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தொழிலாளி பலி
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி, 

பண்ருட்டி தண்டுபாளையம் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 40), கூலி தொழிலாளி. இவருடைய மகன் பட்லர் சுஜித்(20). இவர்கள் 2 பேரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கிருஷ்ணன் ஓட்டினார். பண்ருட்டியில் திருவதிகை கடலூர் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிரே கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்லர் சுஜித் பலத்த காயமடைந்தார்.

இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு காரணமாக டி-பிளாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
2. விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
4. 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்
சென்னையில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்த மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் என்ஜினீயர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
5. மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பர்னிச்சர் கடை ஊழியர் பலி
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பர்னிச்சர் கடை ஊழியர் பலியானார். ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.