மாவட்ட செய்திகள்

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர்: மகள் காதலனுடன் ஓடியதால் விஷம் குடித்து - தந்தை தற்கொலை + "||" + Because the daughter ran with the boyfriend Drinking poison The father committed suicide

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர்: மகள் காதலனுடன் ஓடியதால் விஷம் குடித்து - தந்தை தற்கொலை

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர்: மகள் காதலனுடன் ஓடியதால் விஷம் குடித்து - தந்தை தற்கொலை
திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் மகள் காதலனுடன் ஓடியதால் விஷம் குடித்த தந்தை பரிதாபமாக இறந்தார். தாய் உயிர் தப்பினார்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48), இவரது மனைவி சண்முகசுந்தரி (37). இவர்களது மகளுக்கு தாய் மாமாவுடன் கடந்த மாதம் 29-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் இவரது மகள் தன்னுடைய காதலனுடன் ஓடி சென்று கடந்த 4-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.


இதனால் மனமுடைந்த ஆறுமுகம், சண்முகசுந்தரி இருவரும் கடந்த 6-ந்தேதி விஷம் குடித்தனர்.

இதில் அவர்கள் இருவரும் மயக்கம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரி அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டார். அவரது கணவர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு: விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
திருவள்ளூர் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வாலிபர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...