உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 12 Dec 2019 8:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தோ்தல் இரண்டு கட்டங்களாக, அதாவது வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 9-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரியால், நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

புகார்...

எனவே குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி ேதர்தல் தொடர்பாக ஏதாவது குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு குறைகள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

அரசியல் சாசன விதிமுறைகளின்படி உள்ளாட்சி தேர்தலை முறையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடத்தி முடித்திட ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்ெ்காள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

Next Story