மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் ஆணையர் பேச்சு + "||" + The Commissioner's talk is to clean up the toilet toilet with the permission of the municipal authorities

பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் ஆணையர் பேச்சு

பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் ஆணையர் பேச்சு
திருவாரூரில் பாதாள சாக்கடை நச்சுதொட்டியை நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையர் சங்கரன் கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் மனித கழிவுகளை அகற்றுவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமை தாங்கினார். இதில் மேலாளர் முத்துகுமரன் மற்றும் திருமண மண்டபம், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சங்கரன் பேசியதாவது:-

சுத்தம் செய்ய வேண்டும்

வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள நச்சு தொட்டியினை அகற்றி விட்டு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைந்திட வேண்டும். நச்சு தொட்டியினை நகராட்சி அதிகாரி பரிந்துரையின்படி தான் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது நகராட்சியில் உரிய அனுமதி பெற்று, நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் சுத்தம் செய்ய வேண்டும். இந்த தொட்டியினை காலை நேரங்களில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் நச்சு தொட்டியை சுத்தம் செய்ய கூடாது. பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டால் நகராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று துப்புரவு செய்ய வேண்டும். நச்சு தொட்டி கழிவுகளை திறந்த வெளி, நீர் ஆதாரங்கள் பகுதியில் கொட்ட கூடாது. இந்த கழிவுகளை நகராட்சி பாதாள சாக்கடை சுத்தரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாயத்து தலைவர்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அறிமுக விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
2. ஊராட்சி தலைவராக பணியாற்றி உயர்ந்தவர்: எடப்பாடி பழனிசாமியின் மக்கள் பணியை பின்பற்ற வேண்டும் அமைச்சர் பேச்சு
ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி முதல்வராக உயர்ந்த எடப்பாடிபழனிசாமியின் மக்கள் பணியை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
3. சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு.
4. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் கலெக்டர் ரத்னா பேச்சு
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.
5. சொந்த ஊரான கோவிந்தபேரியில் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான கோவிந்தபேரியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று படத்திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.