சீர்காழியில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


சீர்காழியில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Dec 2019 4:00 AM IST (Updated: 15 Dec 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 21 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையம் சீர்காழி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த வாக்கு எண்ணும் மையத்தை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒன்றிய ஆணையர் ரெஜினாராணியிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், ஒன்றிய பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story