மாவட்ட செய்திகள்

மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் சோதனை + "||" + Police raid on district jail

மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் சோதனை

மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் சோதனை
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


வழக்கம்போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் நேற்று புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிரு‌‌ஷ்ணன் தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

1 மணி நேரம்

அப்போது போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று, அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீசார் குளிக்கும் அறை, கழிவறைகள் போன்றவற்றிற்கும் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது சிறையில் தடை செய்யப்பட்டு உள்ள செல்போன்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கைதிகளிடம் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் போலீசார் அதிரடி சோதனை: ரூ. 17 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.17 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமானநிலையத்தில் வாகன சோதனை மும்முரமாக நடத்தப்படுகிறது.
3. கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. குட்டையில் பிணமாக மிதந்த 2 கல்லூரி மாணவர்கள் கொலையா? போலீசார் விசாரணை
அரக்கோணம் அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் குட்டையில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயற்சி; 4 பேர் கைது கார் பறிமுதல்
ஊத்துக்கோட்டை அருகே காரில் ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 182 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...