மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: நெல்லை, தூத்துக்குடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: நெல்லை, தூத்துக்குடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 7:31 PM GMT)

மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

நெல்லை, 

நாகர்கோவில் -கோவை இடையிலான பாசஞ்சர் ரெயில் வியாழக்கிழமை மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் -திருப்பரங்குன்றம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு -திருச்செந்தூர் இடையிலான பாசஞ்சர் ரெயில் வருகிற 18, 22, 29-ந்தேதிகளில் மதுரை -நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையேயும், 17 மற்றும் 19-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை, 24, 26, 28 மற்றும் 31-ந்தேதி ஆகிய நாட்களில் கோவில்பட்டி -நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் நாளை முதல் 31-ந்தேதி வரை வியாழக்கிழமை மற்றும் 25-ந்தேதி தவிர மற்ற நாட்களில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில் மாலையில் விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் -நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ந்தேதி, 24, 29-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தவிர 31-ந்தேதி வரை மற்ற நாட்களில் திண்டுக்கல் -நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில் -தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை, 23-ந்தேதி, 25-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகள் தவிர மற்ற நாட்களில் நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 31-ந்தேதி வரை திங்கட்கிழமைகள் மற்றும் 25-ந்தேதி தவிர மற்ற நாட்களில் கோவில்பட்டி- திருவனந்தபுரம் இடையே இருமார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைத்து இயக்கப்படும் தூத்துக்குடி இணைப்பு ரெயில் வியாழக்கிழமை மற்றும் 25-ந்தேதி தவிர மற்ற நாட்களில் தூத்துக்குடிக்கு 1 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Next Story