திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி


திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 7:30 PM GMT)

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலமாக போற்றப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை மற்றும் மாலையில் வீதி உலா வந்தனர். 9-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது.

தீர்த்தவாரி

10-வது நாளான நேற்று காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரி‌‌ஷப வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு கோவிலில் உள்ள சூர்ய பு‌‌ஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.


Next Story