வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி முதல் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. 2-ம் கட்டமாக வருகிற 22-ந் தேதியும், 3-ம் கட்டமாக 26-ந் தேதியும் நடக்கிறது. 12,358 அலுவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story