பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 10:00 PM GMT (Updated: 15 Dec 2019 8:10 PM GMT)

ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அரசு சார்பில் அமைக்கப்பட் டது. இதன் அருகே உயர் நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கு இந்த தொட்டி பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் இப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொட்டியின் மின்மோட்டார் செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் இந்த தொட்டியையும் மின்மோட்டாரையும் சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்போர் சங்க தலைவர் கணபதி சுப்பிரமணியன் கூறியதாவது:-

இந்த பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் ஆழ்குழாய், அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட தேவைக்கு தண்ணீர் கிைடத்து வந்தது. பின்னர் மின் மோட்டார் அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த பழுதை நாங்களே சரிசெய்தாலும் சிறிது நாட்களிலேேய மீண்டும் பழுது ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றால் உள்ளட்சி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story