மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு + "||" + In nellai and tenkasi districts 3 thousand tons Deposit of compost

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டது.
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி இருப்பதால் விவசாய பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒருசில இடங்களில் தற்போது நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் நெல் நாற்று நடவு முடிவடைந்து விட்டது.

இந்த பயிர்களுக்கு தற்போது டி.ஏ.பி. மற்றும் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் போட்டு வருகின்றனர். இதற்கு தேவையான உரங்களை கூட்டுறவுத்துறை சார்பில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு நேற்று 42 பெட்டிகளில் 3 ஆயிரம் டன் உரமூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அதில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரவகைகள் இருந்தன. அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயில் இருந்து லாரிகளில் ஏற்றினர். பின்னர் உர மூட்டைகள் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 45,359 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 45 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதுகின்றனர் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
3. நெல்லையில் இருந்து சென்னை வந்து கைவரிசை ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயர் கைது
நெல்லையில் இருந்து சென்னை வந்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கார், 6 புல்லட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. நெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் வாக்காளர் அடையாள அட்டை - கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் வழங்கினார்
நெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடைத்துறை இயக்குனருமான ஞானசேகரன் வழங்கினார்.