நாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம்; பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம் நடந்தது தொடர்பாக பெண் புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களா எப்போதும் பூட்டியே இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வப்போது ஆண்கள் மட்டும் வந்து சென்றுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.
உடனே இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பங்களாவை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பங்களாவில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விபசார கும்பலை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் பங்களாவுக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் ஆணும், பெண்ணும் அரை நிர்வாணத்தில் இருந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவருடன் இருந்த ஆண், போலீசாரை கண்டதும், அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
2 பேர் கைது
எனினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மடக்கிப்பிடித்தனர். இதே போல மற்றொரு அறையிலும் ஒரு இளம்பெண்ணுடன், ஆண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் பிடித்தனர். ஹாலில் ஒரு பெண் மட்டும் இருந்தார். இதனையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அஞ்சுகிராமத்தை சேர்ந்த செம்புலிங்கம் மற்றும் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பங்களாவில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீதா என்ற பெண்தான் புரோக்கராக செயல்பட்டதும், பல ஊர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.
காப்பகத்தில் ஒப்படைப்பு
இதைத் தொடர்ந்து கீதாவை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். நாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Related Tags :
Next Story